தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவரை தாக்கிய இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், சம்பவத்தின் CCTV காட்சி வெளியாகியுள்ளது.கடந்த புதன்கிழமை நள்ளிரவில் திருப்பூரை சேர்ந்த மணிகண்ட பிரபு என்பவர் உடலில் வெட்டு காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு வந்த நிலையில், அவரை உள்நோயாளியாக அனுமதித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அதிகாலையில் அவரை மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுக்க எழுப்பியபோது, அவர்களிடம் அந்த இளைஞர் தகராறில் ஈடுபட்டதுடன், முதுநிலை மருத்துவ மாணவர் ஒருவரை தாக்கியதாகவும் தெரிகிறது.