கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே தங்கள் நிலத்திற்கு இடையூறாக உள்ளதாக கூறி கொட்டகையை கட்டையால் அடித்து நொறுக்கிய நபர்களின் வீடியோ வெளியாகியுள்ளது. கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த காசிம் என்பவர் தனது பேக்கரிக்கு தேவையான பொருட்களை தயாரிக்க அமைக்கப்பட்ட கொட்டகைக்கு அருகில், அவரது உறவினரான ஜமீன்தார் புதிதாக இடம் வாங்கியுள்ளார். கொட்டகை இடையூறாக இருப்பதாக இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஜமீன்தார் மற்றும் அவரது உறவினர் ரிஸ்வான் ஆட்களுடன் வந்து கொட்டகையை அடித்து நொறுக்கினர். மேலும் தடுக்க வந்த மாற்றுத்திறனாளி பெண் உட்பட நான்கு பேரை தாக்கிய நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.