நாகர்கோவில் அருகே, இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்களை ஒரு கும்பல் வழிமறித்து தாக்கிய காட்சி, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் அருகே தெங்கம்புதூர் பகுதியில், இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர், ஆயுதங்களோடு தயாராக நின்று கொண்டிருந்தனர். அப்போது, எதிர் திசையிலிருந்து, இரு சக்கர வாகனத்தில், 3 இளைஞர்கள் வந்த நிலையில், சாஸ்தான் விளை சந்திப்பு பகுதியில் காத்திருந்த நான்கு பேரும் வழிமறித்தனர். இதனால் வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்த நிலையில் அந்த வாகனத்தில் வந்த மூன்று பேரையும் கொடூரமாக தாக்கினர். தாக்கிய கும்பலைச் சேர்ந்த மேலும் சிலர் விரைந்து வந்து ஏற்கனவே தாக்கப்பட்டவர்களை மீண்டும் தாக்கி விட்டு, தப்பிச் சென்றனர். இதுதொடர்பான, சிசிடிவி காட்சி தற்போது சமூக வலை தளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில், சுசீந்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.