தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தனியார் பேருந்தை வழிமறித்து நடத்துநர் மீது தாக்குதல் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். அய்யம்பேட்டை அருகே அஜித்குமார் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பேருந்தில் ஏற்றியபோது நடத்துநர், வேகமாக ஏறுங்கள், இல்லையென்றால் இறங்குங்கள் எனக் கூறியதாக சொல்லப்படுகிறது. பின்னர் பேருந்து புறப்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த அஜித்குமார், இருசக்க வாகனத்தில் பேருந்தை துரத்திச் சென்று வயலூர் அருகே வழிமறித்து நடத்துநரை சரமாரியாக தாக்கியுள்ளார். சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியான நிலையில், அஜித்குமார் மற்றும் அவருடன் வந்த தஸ்தாகீர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.