விடுமுறையில் பெற்றோருடன் கண்மாயில் குளிக்க சென்ற மாணவர்களை ஆசிரியர் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் மேலநம்பியபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஞாயிறு விடுமுறையையொட்டி பெற்றோருடன் கண்மாயில் குளிக்க சென்றதாகவும் அதை பார்த்த ஆசிரியர் ராதாகிருஷ்ணன் அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பள்ளியில் மாணவர்களை ஆசிரியர் ராதாகிருஷ்ணன் காலணி அணிந்த காலால் தாக்குவதை வழக்கமாக கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே ஆசிரியர் ராதாகிருஷ்ணனை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என பெற்றோர் வலியுறுத்திய நிலையில் ஆசிரியர் ராதாகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.