கோவை பொள்ளாச்சி உடுமலை சாலையில் தனியார் கல்லூரி மாணவர்களை இந்து முன்னணி நிர்வாகி அடியாட்களுடன் வந்து தாக்கிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. உடுமலை சாலையில் உள்ள சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இடையே கடந்த சில தினங்களுக்கு முன் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கல்லூரி அருகேயுள்ள டீக்கடையில் மாணவர்கள் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அங்கு அடியாட்களுடன் வந்த மக்கினாம் பட்டியை சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகி முத்து, மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் பயந்த சக மாணவர்கள் பதறியடித்து பைக்கில் ஏறி தப்பி சென்றனர். இது குறித்து கோமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.