அருப்புக்கோட்டையில் பெண் டி.எஸ்.பி. மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி முருகேசனை போலீசார் பிடிக்க முயன்ற போது அவருக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. திருச்சுழி டி.எஸ்.பி.ஜெகநாதன் தலைமையில் தனிப்படை போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். அருப்புக்கோட்டை அருகே தொப்பலாக்கரை பகுதியில் காட்டுக்குள் முருகேசன் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் தப்பியோட முயற்சித்த நிலையில் தடுமாறி கீழே விழுந்ததில் முருகேசனுக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனை அடுத்து போலீசார் அவரை சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.