திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே முன்பகை காரணமாக அதிமுகவை சேர்ந்த ரமேஷ் என்பவரை திமுகவை சேர்ந்த சக்தி என்பவர் அரிவாளால் வெட்டியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இருவரின் மனைவிகளும் மன்னார்குடி 7 வது வார்டில் போட்டியிட்ட நிலையில் இருதரப்பினருக்குமிடையே வாக்கு சேகரிப்பது தொடர்பாக அடிக்கடி மோதல் போக்கு ஏற்பட்டது. இந்நிலையில் ரமேஷ் இரவு நேரம் பாலத்தின் அருகே நின்று கொண்டிருந்த போது, சக்தி நண்பர்களுடன் சென்று கத்தி மற்றும் அரிவாளுடன் சராமரியாக தாக்கியதில் பலத்த காயமடைந்த ரமேஷ் மருததுவமனையில் அனுமதிக்கப்பட்டார்.