கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பைனான்சியரை மர்மநபர்கள் வழிமறித்து சரமாரியாக வெட்டிய நிலையில், நிலத்தகராறு காரணமாக பங்காளிகள் கூலிப்படை வைத்து கொலை செய்ய முயல்வதாாக பைனான்சியர் குற்றம்சாட்டியுள்ளார். மத்தூர் அடுத்த பெருமாள்குப்பம் பகுதியைச் சேர்ந்த பைனான்சியர் சென்னையனுக்கும், அவரது பங்காளிகளுக்கும் 10 ஆண்டுகளாக நிலத்தகராறு இருந்து வருகிறது. இந்நிலையில் மத்தூரிலிருந்து மாடரஅள்ளி வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற சென்னையனை, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் மூவர் கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். ரத்தவெள்ளத்தில் சரிந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.