கரூரில் வழிவிட மறுத்ததாக கூறி மாற்றுத்திறனாளியை காரில் சென்ற இருவர் வழிமறித்து தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாற்றுத்திறனாளி தனது பைக்கில் சென்று கொண்டிருந்த போது, அவர் காருக்கு வழிவிட வில்லை என கூறப்படுகிறது. இதனால் காரில் இருந்த இருவர் மாற்றுத்திறனாளியை மறித்து, தகாத வார்த்தைகளால் திட்டி அவரது கன்னத்தில் அறைந்தனர். இதனை பார்த்த அருகில் இருந்த பொதுமக்கள் தட்டி கேட்டதால், மாற்றுத்திறனாளி மீது தாக்குதல் நடத்திய இருவரும் காரில் ஏறி தப்பி சென்றனர்.