திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே காவலர் வீட்டில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது செய்யப்பட்ட நிலையில், அச்சம்பவத்தின் CCTV காட்சிகள் வெளியாகியுள்ளன. சங்கன்திரடு பகுதியைச் சேர்ந்த முப்பிடாதி என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள நிலையில், அவரை கைது செய்து காவலர் செல்வ குமரேசன் எச்சரிக்கை விடுத்ததால், இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.