திருப்பத்தூர் அருகே, பெருமாப்பட்டு கிராமத்தில் எருதுவிடும் திருவிழாவில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து, பத்திரிகையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காயமடைந்த செய்தியாளர் பிரவீன்குமாரிடம் வாக்குமூலம் பெறாமல் போலீசார் காலம் கடத்துவதாக செய்தியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.