கோயம்பேட்டில் ஆட்டோ டிரைவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய 6 பேர் கொண்ட கும்பல், அடுத்த சில மணிநேரத்தில் கொளத்தூரில் ஒரு இளைஞரை வெட்டிய கொடூரம்... சென்னை, கோயம்பேடுல ஒருத்தர 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளால வெட்டி போட்டுட்டு தப்பிச்சி ஓடிட்டதா போலீசுக்கு ஒரு போன் வந்துருக்குது. அதே கும்பல், கொளத்தூர்லயும் சிலர கண்மூடித்தனமா வெட்டி போட்ருக்குறதா அங்க உள்ள போலீசுக்கும் போன் வந்துருக்குது.. இப்டி ஒரே கும்பல் ரெண்டு இடங்கள்ல கொடூர கொலை முயற்சியில ஈடுபட்டதுக்கான காரணம் பழைய பகைதான் அப்டிங்குறது விசாரணையில வெளிய வந்துருக்குது.49 வயசான கணேசன் ஆட்டோ ஓட்டிட்டு இருக்காரு. 39 வயசான அமாவாசை என்ற விக்னேஷ் வண்ணமீன்கள் விற்பனை நிலையத்துல வேலை பாத்துட்டு இருக்காரு.சென்னை கொளத்தூர் ராஜமங்கலம் மகாத்மா காந்தி நகரை சேர்ந்த ரெண்டு பேருக்கும் 10 வயசு வித்தியாசம் இருந்தாலும் ஒண்ணுக்குள்ள ஒண்ணா நண்பர்கள் மாதிரி தான் பழகிட்டு இருந்துருக்காங்க. ரெண்டுபேரும் பேருக்குதான் பகல்ல ஆட்டோ ஓட்றது, மீன்கடையில வேலை பாக்குறதுனு இருந்துருக்காங்க.ஆனா, நைட்நேரத்துல அவங்களோட மெயின் வேலையே கஞ்சா மற்றும் போதைப்பொருள் விக்கிறது தான். கிட்டத்தட்ட 7 வருஷமா ரெண்டு பேரும் சேர்ந்து போதைப்பொருள் சேல்ஸ் பண்ணிட்டு இருந்துருக்காங்க. இந்த சூழல்ல, வர்ற லாபத்த பிரிக்கிறதுல ரெண்டு பேருக்குமே முட்டல் மோதல் ஏற்பட்டுருக்குது.இதனால, டென்ஷன் ஆன ரெண்டுபேருமே இனி நீ தனியா போதைப்பொருள் சேல்ஸ் பண்ணு, நான் தனியா சேல்ஸ் பண்றேனு ஆளுக்கொரு பக்கமா விலகிட்டாங்க.கணேசன், லசில இளைஞர்களை சேத்துக்கிட்டு ஒரு ஏரியாவுல போதைப்பொருள் சேல்ஸ் பண்ணினப்ப, அமாவாசையும் தனி டீம உருவாக்கி, அதே ஏரியாவுல போதைப்பொருள் சேல்ஸ்ல ஈடுபட்ருக்காரு. அப்பவும் ரெண்டு தரப்புக்கும் மோதல் ஏற்பட்ருக்குது. எந்த ஏரியாவுல யாரு சேல்ஸ் பண்றது - எந்த ஏரியாவுல யாரு பெரிய ஆளுனு பிரச்சனை ஆரம்பிச்சிருக்குது.இதுக்கு மத்தியில போதைப்பொருள் விற்பனை நடக்குறதாகவும், அதனால பள்ளி மற்றும் கல்லூரி படிக்கிற மாணவர்களோட எதிர்காலமே வீணாகுதுனும் பொதுமக்கள் போலீஸ்கிட்ட புகார் குடுத்துருக்காங்க. இதனால, போதைப்பொருள் சேல்ஸ் கும்பல பிடிக்கிற பணியில இறங்கிருக்காங்க போலீசார்.அப்போ, அமாவாசை எந்த பகுதியில கஞ்சா சேல்ஸ் பண்ணுவான், எத்தனை மணிக்கு சேல்ஸ் பண்ணுவான், யாரெல்லாம் அவனோட கூட்டாளிகள்னு எல்லா விவரத்தையும் உளவுத்துறை போலீசுக்கு தகவல் குடுத்துருக்கான் கணேசன். அந்த தகவல்படியே சைலண்ட்டா போன போலீசார் அமாவாசை, அவனோட கூட்டாளிகள் சின்ன கருப்பு, பெரிய கருப்பு, ஜீவான்னு மொத்தம் 6 பேர அரெஸ்ட் பண்ணி, சிறையில அடைச்சிருக்காங்க. கணேஷன் தான் போலீஸ்கிட்ட காட்டி குடுத்துட்டானு தெரிஞ்சிக்கிட்ட அமாவாசையும் அவனோட கூட்டாளிகளும் சிறைக்குள்ளேயே ஒரு மாஸ்டர் பிளான போட்ருக்காங்க.ஜெயில்ல இருந்து வெளிய வந்ததும் கணேசனையும் அவனோட கூட்டாளிகளோட கதையையும் முடிக்கணும், அப்பதான் பிசினஸ்லயும் எதிரி இருக்கமாட்டான், புதுசா எந்த எதிரியும் உருவாகமாட்டானு ஸ்கெட்ச் போட்ருக்காங்க.ஜெயிலுக்குப்போன 90 நாட்கள் கழித்து, அதாவது அக்டோபர் 30 ஆம் தேதி வியாழக்கிழமை அமாவாசையும் அவனோட கூட்டாளிகளும் பெயில்ல வெளிய வந்துருக்காங்க. வந்த முதல் நாள் அமைதியா இருந்துருக்காங்க. அடுத்த நாள் கணேஷனை கண்காணிக்க ஆரம்பிச்சிருக்காங்க.அதுக்கு அடுத்த நாள், ஏற்கெனவே சிறையில போட்டு வச்சிருந்த திட்டத்த செயல்படுத்திருக்காங்க. ஆனா, அந்த திட்டமும் அரைகுறையாவே முடிஞ்சிருக்கு. அதாவது, அமாவாசையும் அவனோட கூட்டாளிகளும் நினைச்சமாதிரி கொலையில முடியாம கொலை முயற்சியில முடிஞ்சிருக்குது. நவம்பர் ஒண்ணாந்தேதி சனிக்கிழமை நைட் 9 மணியளவுல கணேசனோட செல்போனுக்கு ஒரு கால் வந்துருக்குது. அண்ணன், அவசர வேலையா தம்பரம் வரைக்கும் போகணும் நீங்க உங்க ஆட்டோவ எடுத்துட்டு வர முடியுமானு ஒரு ஆணோட குரல் கேட்ருக்குது. அப்போ, நான் ஒரு சவாரி ஏத்துறதுக்காக கோயம்பேடு வரைக்கும் வந்துருக்கேனு சொல்லிருக்காரு கணேசன். அவரு எங்க இருக்காருனு தெரிஞ்சிக்கிறதுக்காக வேற ஒரு நபர பேச வச்சிருக்காங்க அமாவாசையும் அவனோட கூட்டாளிகளும். அடுத்து தன் கூட்டாளிகளோட ரெண்டு பைக்ல கோயம்பேடு போயிருக்காரு அமாவாசை.கோயம்பேடுல உள்ள ஒரு ஓட்டல் பக்கத்துல நின்னுட்டு இருந்துருக்காரு கணேஷன். போன வேகத்துல கணேஷன 6 பேர் சேர்ந்து சரமாரியா வெட்டிருக்காங்க. உசுர காப்பாத்திக்க கணேஷன் ஓட்டலுக்குள்ள ஓடியும் விடாம வெட்டிருக்காங்க அமாவாசையும், அவனோட கூட்டாளிகளும்.அரிவாள் வெட்டுல அதிக ரத்தம் வெளியேறி கணேஷன் மயங்குனதும், அவரு உயிரிழந்துட்டதா நெனச்சி அங்க இருந்து அந்த கும்பல் எஸ்கேப் ஆகிட்டாங்க. அடுத்து ஓட்டல் ஊழியர்கள் தகவல் குடுத்ததும் அங்க வந்த போலீஸ், கணேஷனை மீட்டு ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பி வச்சிட்டு விசாரணையில இறங்கிருக்காங்க.உயிருக்கு ஆபத்தான நிலையில இருக்குற கணேஷனுக்கு கேஎம்சி ஹாஸ்பிட்டல்ல டாக்டர்கள் சிகிச்சை குடுத்துட்டு இருக்காங்க.. இதுக்கு மத்தியில, கோயம்பேடுல இருந்து கொளத்தூர் கிரிஜா நகர் மேட்டுத்தெருவுக்கு போயிருக்காங்க அமாவாசையோட கேங். அங்க கணேசனோட கூட்டாளி கார்த்திக்கை அவங்க வீட்டுக்கேபோய் தேடிருக்காங்க.ஆனா, அங்க கார்த்திக் இல்ல. பக்கத்துல உள்ள விநாயகர் கோவில்ல நின்னு தன் நண்பர்களோட பேசிட்டு இருந்துருக்காரு கார்த்திக். அத பாத்த அமாவாசையோட பைக்கை கொஞ்ச தூரம் தள்ளி நிறுத்திட்டு வந்து கார்த்திக்கை அவரோட நண்பர்களையும் அரிவாளால வெட்டிருக்காங்க.தடுக்க வந்த பொதுமக்கள் சிலருக்கும் அரிவாள் வெட்டு விழுந்துருக்குது. ஆனா கார்த்திக்கிற்கு மட்டும் வெட்டு சகட்டு மேனிக்கு விழுந்துருக்குது. அதுல சுயநினைவை இழந்து கார்த்திக் கீழே விழ, அவரு உயிரிழந்துட்டதா நினைச்சி அங்க இருந்து தப்பி ஓடிருக்காங்க அமாவாசையும் அவனோட கேங்கும்.மாதவரத்துல உள்ள ஒரு பிரைவேட் ஹாஸ்பிட்டல்ல சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ருக்குற கார்த்திக்கோட தலையில 25 தையல்களும், நாக்குல 10 தையல்களும் போடப்பட்ருக்குது. ஒரு பெண் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோரை அரிவாளால வெட்டிட்டு எஸ்கேப் ஆன அமாவாசையையும் அவனோட கேங்கையும் போலீஸ் ஸ்பெஷல் டீம் தீவிரமா தேடிட்டு இருக்காங்க.இதையும் பாருங்கள் - Chennai Ganja Attack | கஞ்சா போதையில் கொடூர தாக்குதல், போலீசில் சரணடைந்த போதை கும்பல் | Surrender