கொட்டகையில் அமர்ந்து, மது அருந்திக்கொண்டிருந்த மூன்று நபர்கள். திடீரென நண்பர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம். முடி வெட்டும் தொழிலாளியை அடித்தே கொலை செய்த இருவர். தப்பி ஓடிய கொலையாளிகளை வலைவீசி தேடி வரும் போலீஸ். முடிவெட்டும் தொழிலாளி எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலை செய்யும் அளவுக்கு அவர்களுக்குள் அப்படி என்ன பிரச்னை? நடந்தது என்ன? கொட்டகையில் மயங்கி கிடந்த 50 வயதான இளங்கோவன்தேவன்குடி பகுதியில உள்ள ஒரு கொட்டகையில, உடல் முழுக்க காயங்களோட 50 வயசான இளங்கோவன்-ங்குற நபர் மயங்கி கிடந்துருக்காரு. இதபாத்த அந்த வழியா போன பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ ஃபோன் பண்ணி வரவச்சு இளங்கோவன மீட்டு ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பி வச்சாங்க. அப்ப அங்க அவர பரிசோதித்த டாக்டர் இளங்கோவன் உயிரிழந்துட்டதாக சொல்லிட்டாங்க. இந்த விஷயத்த கேள்விப்பட்டு ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ் சடலத்த மீட்டு போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சாங்க. அடுத்து கொலையாளிகள கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில இறங்குனாங்க போலீஸ். தேவன்குடி பகுதி கிராமங்குறதால அந்த ஏரியாவுல பெரிய அளவுக்கு சிசிடிவி இல்லை. இதனால கொலையாளிகள் யாருன்னு கண்டுபிடிக்க முடியாம போலீஸ் திணறிட்டு இருந்துருக்காங்க.ராஜேஷ், முத்துக்குமாரை தேடி வரும் போலீஸ்அதுக்கடுத்து இளங்கோவனோட செல்போன கைப்பற்றுன போலீஸ், அவருக்கு யார் கிட்ட இருந்து அடிக்கடி ஃபோன் வந்துருக்கு, யாரு லாஸ்ட்டா கால் பண்ணிருக்கான்னு மொத்த டீடைல்சையும் எடுத்து பாத்துருக்காங்க. ஆனா அதுலையும் எந்த ஒரு துப்பும் கிடைக்கல. இதுக்கிடையில உயிரிழந்த இளங்கோவனோட மனைவி, ராஜேஷூம், முத்துக் குமார்-ங்குற நபரும்தான் என் கணவன வீட்டுக்கு வந்து கூப்டு போனாங்க, அவங்கள பிடிச்சு விசாரிச்சா எல்லா உண்மையும் தெரியவரும்ன்னு போலீஸ் கிட்ட சொல்லிருக்காங்க. இதனால போலீசார் நேரா ராஜேஷ், முத்துக்குமாரோட வீட்டுக்கு போய் பாத்துருக்காங்க. ஆனா ரெண்டு பேருமே வீட்ல இல்லை. இதனால அவங்க தான் கொலையாளிகள்னு கன்பார்ம் பண்ண போலீஸ் ரெண்டு பேரையும் வலைவீசி தேடிட்டு இருக்காங்க.இளங்கோவன், ராஜேஷ், முத்துக்குமார் ஆகியோர் நண்பர்கள்தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை அடுத்த தேவன்குடி மீனவர் காலனி பகுதிய சேந்த 50 வயசான இளங்கோவனுக்கு சரிதா-ங்குற மனைவியும் மூன்று பெண் குழந்தைகளும் இருக்காங்க. இளங்கோவன் முடி திருத்தும் வேலை செஞ்சுட்டு இருக்காரு. இவரோட கடைக்கு அடிக்கடி முடி வெட்ட வர்ற பக்கத்து கிராமத்த சேந்த ராஜேஷூம், முத்துக்குமாரும் இளங்கோவன் கூட ரொம்ப குளோஸா பழக ஆரம்பிச்சுருக்காங்க. அதுக்கடுத்து இந்த மூணு பேரும் ஒன்னா சுத்த போறது, ஒன்னா உட்காந்து மதுக்குடிக்கிறதுன்னு ஜாலியா இருந்துருக்காங்க. மூணு பேரும் ஒன்னா உட்காந்து மதுக்குடிக்கும் போது இவங்களுக்குள்ள அடிக்கடி பிரச்னை ஏற்படும்ன்னு கூறப்படுது. இதனால இவங்களுக்குள்ள பகையும் ஏற்பட்டிருக்கு.இளங்கோவனை அடித்தே கொலை செய்த ராஜேஷ், முத்துக்குமார்சம்பவத்தன்னைக்கு ராஜேஷ், இளங்கோவன், முத்துக்குமார் ஆகிய மூணு பேரும் தேன்குடி கொட்டகையில உட்காந்து மதுக்குடிச்சுருக்காங்க. அப்ப மதுபோதையில இளங்கோவன் அந்த ரெண்டு பேரையும் தகாத வார்த்தையால திட்டிருக்காரு. அத கேட்டு கோபமான நபர்கள், பதிலுக்கு தகாத வார்த்தையால திட்ட அவங்களுக்குள்ள வாக்குவாதம் அதிகமாகிருக்கு. இதனால கொலை வெறியான ரெண்டு பேரும் இளங்கோவன கண்மூடித்தனமா தாக்கிருக்காங்க. இதுல சம்பவ இடத்துல சுருண்டு விழுந்த அவரு உயிருக்கு போராடிட்டு இருந்தாரு. அடுத்து மருத்துவமனையில அனுமதிக்கப்பட்ட நிலையில உயிரிழந்துட்டாரு. இந்த விஷயத்த கேட்டு ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ் தீர விசாரணை பண்ணி ராஜேஷ், முத்துக்குமார வலைவீசி தேடிட்டு இருக்காங்க. Related Link ஒரு சவரனுக்கு ரூ.5,040 உயர்ந்த தங்கம் விலை