திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதிகளில் ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்தவர்களிடம் உதவி செய்வதாக நடித்து ஏடிஎம் கார்டை மாற்றி அவர்களின் பணத்தை நூதன முறையில் திருடியதாக வட மாநில இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர். உத்தரபிரதேசத்தை சேர்ந்த மூவரிடம் இருந்தும் பல்வேறு வங்கிகளின் 94 ஏடிஎம் கார்டுகள் கைப்பற்றப்பட்டன.இதையும் படியுங்கள் : அதிவேகமாக பைக் ஓட்டி மாணவர்கள் அட்ராசிட்டி