கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் நடைபெற்ற தை மாத ஜோதி தரிசனத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு மனமுருக வழிபாடு செய்தனர். இரவு 7.30 மணியளவில் 6 திரைகளையும் விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்ட நிலையில், அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி என பக்தர்கள் மனமுருக ஜோதி தரிசனம் செய்தனர்.