சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்ட பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் சித்ரா ஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் நடைபெற்ற சம்பவம் குறித்து சட்டமன்ற உறுப்பினர் தலைமை ஆசிரியரிடம் கேட்ட போது, கைது செய்யப்பட்ட இளையகண்ணு யாருக்கும் மரியாதை கொடுக்காமல் இருந்து வந்ததாக கூறினார். மேலும், இளையகண்ணின் பாலியல் சீண்டலுக்கு பயந்து பல மாணவிகள் டிசி வாங்கி சென்றுள்ளதாகவும், புகார் அளித்தால் இளையகண்ணு தனது செல்வாக்கை பயன்படுத்தி தப்பித்துவிடுவதாகவும் கூறினார்.