திமுக பொதுக்கூட்டத்தில் எம்.பி.க்கு எதிராக கோஷமிட்ட பாமக பிரமுகரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதை கண்டித்து, அக்கட்சியினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் பூதேரிபுல்லவாக்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய எம்.பி. தரணிவேந்தன், செய்யாறு சிப்காட் விரிவாக்கத்துக்கு ஆதரவாக பேசினார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாமகவை சேர்ந்த பாலாஜி என்பவர், மேடைக்கு முன்பு நின்று கொண்டு கூச்சலிட்டார்.