மதுரை தவெக மாநாட்டில், எம்ஜிஆர், விஜயகாந்த் குறித்துப் பேசி, விஜய் நெகிழ்ந்தார். மாநாட்டில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது:மதுரை என்றால் நினைவுக்கு வருவது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தான். நமது வைகை ஆறு தான். அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம், மதுரை மீனாட்சி அம்மன். இந்த மண்ணோட உண்மையான குணம், உணர்வுப்பூர்வமான மண். இந்த மண்ணில் வாழும் மக்களும் உணர்வுப்பூர்வமானவர்கள் தான். இந்த மண்ணில் கால் வைத்த பிறகு, ஒருவரை பற்றி தான் மனதில் ஓடிக் கொண்டு இருந்தது.சினிமாவிலும், அரசியலிலும் என் தலைவர் எம்.ஜி.ஆர். அவருடன் பழக எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், அவரைப் போலவே குணம் கொண்ட அண்ணன் கேப்டன் விஜயகாந்த் உடன் பழக எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அவரும் இந்த மதுரை மண்ணை சேர்ந்தவர் தான்.எம்ஜிஆர் யார் தெரியுமா? அவரது ’மாஸ்’ என்ன என்று தெரியுமா? அவர் உயிரோடு இருக்கும் வரைக்கும் 'சிஎம்' சீட்டை பற்றி ஒருவராலும் நினைத்து பார்க்க முடியவில்லை. யாரும் கனவில் கூட நினைத்து பார்க்க முடியவில்லை. 'எப்படியாவது சிஎம் சீட்டை என்னிடம் கொடுத்து விடுங்கள். எனது நண்பர் வந்த உடன் கொடுத்து விடுகிறேன்' என எதிரியை கூட கெஞ்ச வைத்தவர்.ஆனால், இப்போது அவர் ஆரம்பித்த கட்சி, எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியை கட்டிக்காப்பது யார்? எப்படி இருக்கிறது என நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? அப்பாவி தொண்டர்கள் அதை வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள்.தமிழக மக்கள் உணர்வுப்பூர்வமாக நம்முடன் நிற்பவர்கள். அதற்கு அடையாளம் தான் மதுரை மண். தவெக கையில் எடுத்து இருக்கும் அரசியல் அப்படி போன்றது தான்.உண்மையான அரசியல், உணர்வுப்பூர்வமான அரசியல், நல்லவர்கள் அரசியல், நல்லவர்களுக்கான அரசியல், நாட்டு மக்களுக்கான அரசியல், நல்லது மட்டுமே செய்யும் அரசியல்.இதோ நம்முடைய 2வது மாநில மாநாடு, வாகை சூடும் வரலாறு திரும்புகிறது. அப்படித்தான் இந்த மாநாட்டுக்கு பெயர் வைத்து இருக்கிறோம்.இவ்வாறு விஜய் பேசினார்.