சுதந்திர தினவிழாவையொட்டி கடலூர் மாவட்டம் வேப்பூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கிராம மக்கள் அதிகாரிகளிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் சாலை, குடிநீர், கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக்கூறி ஊராட்சி செயலாளரிடம் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இளைஞர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால் பெண் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோபமடைந்து அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.