மதுரையில் நடைபெற்ற தவெக 2வது மாநில மாநாட்டில், கட்சித் தலைவர் விஜய், சிங்கமென கர்ஜித்து, ஆவேச உரையாற்றினார். தவெக தலைவர் விஜய் உரையின் ஹைலைட்ஸ்...சிங்கம் எப்போதும் தனித்துவமானது - சிங்கம் கர்ஜித்தால் எல்லா திசையும் அதிரும், சிங்கம் தன்னைவிட பெரிய எதிரியைத் தான் மோதி வீழ்த்தும். சிங்கம் தனியாகவும் வரும், கூட்டமாகவும் வரும், தனியா வந்தாலும் சிங்கம் தான் ராஜா.என்னுடைய அண்ணன் விஜயகாந்த் உடன் பழகி இருக்கிறேன், அவரும் இந்த மதுரையை சேர்ந்தவர் தான், அவரை மறக்க முடியுமா?சினிமாவிலும் அரசியலிலும் என் தலைவர் எம்ஜிஆர்; எம்ஜிஆர் போன்ற குணம் கொண்டவர் அண்ணன் விஜயகாந்த்.தமிழக அரசியலையே மாற்றும் மாநாடு இது. எதிரிகள் சொல்லும் எதையும் காதில் போட்டுக் கொள்ள மாட்டோம், எல்லா கூக்குரலையும் சிரிப்போடு கடந்து வந்துள்ளோம்.நான் அரசியலுக்கு வர மாட்டேன் என்று சொன்னார்கள், மாநாடு நடத்த மாட்டேன் என்றார்கள். இப்போது பாருங்கள். என் உடன் இருப்பவர்களே நான் வர மாட்டேன் என்றார்கள், நான் ஆட்சியை பிடிக்க மாட்டேன் என்கிறார்கள்.அவர்(ரஜினிகாந்த்) அரசியலுக்கு வரவில்லை, விஜய் எப்படி வருவார் என்று சொன்னார்கள்; நான் வந்துவிட்டேன். எங்களுடைய ஒரே கொள்கை எதிரி பாஜக தான்; ஒரே அரசியல் எதிரி திமுக தான், மாற்றமே இல்லை. ’டீலிங்’ போட்டு, கூட்டணி வைத்து அரசியல் செய்யும் கட்சி நாங்கள் இல்லை. நாங்கள் ஒன்றும் உலக மகா ஊழல் கட்சியும் இல்லை, பாஜக உடன் மறைமுக ’டீலிங்’ செய்யும் பாசிச கட்சியும் இல்லை.தவெக கையில் எடுத்துள்ள அரசியல், உண்மையான அரசியல்; உணர்வுப்பூர்வமான அரசியல். நல்ல அரசியல், நல்லது மட்டுமே செய்யும் அரசியல்.வரும் தேர்தல் 2026ல் தவெக, திமுக இடையில் தான் போட்டியே, வேறு போட்டியே இங்கு இல்லை.கூட்டணி வைக்கலாம், கூட்டணி வைத்து தப்பிக்கலாம் என்று திமுக நினைக்கிறது, அது நடக்காது.இஸ்லாமியர்களுக்கு எதிராக சதி செய்யும் ஆட்சி பாஜக ஆட்சி. பிரதமர் மோடிக்கு, கேள்விகளை கேட்க வந்துள்ளேன். இதுதான் நீங்கள் நடத்தும் ஆட்சியா?நரேந்திர தாமோதர் தாஸ் மோடியே - மக்களை ஏமாற்றியது போதும்.வெற்று விளம்பர மாடல் திமுக... பாஜக உடன் ரகசிய கூட்டணி வைத்துள்ளது. ஒரு ரெய்டு வந்தால் போதும் உடனே டெல்லிக்கு போய் ரகசிய மீட்டிங் போடுகிறார்கள். ஸ்டாலின் அங்கிள் - வெரி ராங்க் அங்கிள்...மதுரை கிழக்கில் விஜய் போட்டி... மேற்கில் விஜய் போட்டி... 324 தொகுதிகளிலும் விஜய் தான் போட்டி... அப்படி நினைத்து வாக்களியுங்கள்.இந்த கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல, ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் மாறும். நான் ஒன்றும் மார்க்கெட் போன பின், அடைக்கலம் தேடி, அரசியலுக்கு வரவில்லை, படைக்கலத்தோடு வந்திருக்கிறேன். நான் வந்ததற்கு ஒரே காரணம் நன்றிக்கடன். என் கடன் இனி, மக்களுக்கு பணி செய்து கிடப்பதே. உங்களுடன் பேச, உங்களுடன் நிற்க, உங்களுக்கு சேவை செய்ய உங்கள் விஜய் நான் வரேன்...உங்களுக்காக உண்மையாக உழைக்க வந்திருக்கிறேன். நம்பிக்கையோடு இருங்கள். நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம். இவ்வாறு தவெக தலைவர் விஜய் பேசினார்.