திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் முருகப் பெருமானை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மார்கழி மாத கடைசி கிருத்திகையை முன்னிட்டு, முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து, வள்ளி- தெய்வானை சமேதராக முருகப் பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் மாடவீதிகளில் உலா வந்தார்,