சென்னையில், இன்று நவம்பர் 4ஆம் தேதி, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு சவரன் ரூ.90,000 என, விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச நிலவரங்களால், இந்தியாவில் ஆபரணத் தங்கத்தின் விலையில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,480க்கு விற்பனை செய்யப்பட்டது.ஒரு கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,310க்கு விற்பனை ஆனது. அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.166க்கு விற்பனை ஆனது. நேற்று, திங்களன்று, தங்கத்தின் விலையில், ஒரு சவரனுக்கு ரூ.320 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.90,800 என விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11.350க்கு விற்பனை ஆனது. இந்த நிலையில், இன்று காலை (செவ்வாய்) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலையில், ஒரு சவரனுக்கு ரூ.800 குறைந்தது. ஒரு சவரன் ரூ.90,000 ஆக, விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு ரூ.165 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,250க்கு விற்பனை ஆகிறது. தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ஒரே நாளில் ரூ.800 குறைந்து, நகைப் பிரியர்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.3 குறைந்து, ஒரு கிராம் ரூ.165க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இதையும் பாருங்கள் - Today Gold Rate | அதிரடியாக குறைந்த தங்கம் விலை | Gold Price Today | Chennai Gold Rate