நாமக்கல் மாவட்டம் மூலக்குறிச்சியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் கொத்தாம்பாடியை சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் கொல்லிமலைக்கு சுற்றுலா சென்றுவிட்டு மாலை சொந்த ஊருக்கு திரும்பினர். மூலக்குறிச்சி வனச் சோதனை சாவடி அருகே உள்ள வளைவில் அதிவேகமாக திரும்பிய வேன், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது.