சென்னை மதுரவாயல் அருகே முதியவரின் நிலத்தை அபகரிக்க முயன்றதாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ விருகை ரவியின் தம்பி உட்பட 15 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். பாலவாக்கம் பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவரின் நிலத்தை அபகரிக்க முயன்றதோடு, மிரட்டல் விடுத்ததாக வி.என்.கண்ணன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.