கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் காமராஜர் பேருந்து நிலைய நடைமேடையில் இரவில் தூங்கிக் கொண்டிருந்த நரிக்குறவர் இன பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசு பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். கடந்த 4ஆம் தேதி இரவு, இருசக்கர வாகனத்தில் சீருடை அணிந்து வந்த ஊழியர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில், அத்துமீறலில் ஈடுபட்டவர் ஓட்டுநர் ஜவகர் என்பது தெரியவந்தது. நரிக்குறவர் இன பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் ஜவகரை கைது செய்த போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.