கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மது போதையில் மளிகை கடையை காரால் இடித்து பொருட்களை சேதப்படுத்திய உதவி பேராசிரியரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் பாலசந்தர் என்பவர் காசிக்கடைத் தெருவில் உள்ள மளிகை கடைக்கு மது போதையில் கூல்ட்ரிங்க்ஸ் வாங்கியபோது கடைக்காரருக்கும் பாலச்சந்தருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாலசந்தர் தனது காரால் மளிகை கடையை இடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.