லஞ்சம் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த தேவன் மகன் சிரஞ்சீவி (24) என்பவரும் அவரது அண்ணனும் கடந்த 2 இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்ற ஜங்களாபுரம் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இது எதிர் வாகனத்தில் வந்த நபர் படுகாயம் அடைந்து நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதன் காரணமாக நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து சிரஞ்சீவியின் வாகனத்தை பறிமுதல் செய்து நாட்றம்பள்ளி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இந்த நிலையில் அந்த வண்டியை மீட்க சிரஞ்சீவி நாட்றம்பள்ளி காவல் நிலையத்திற்கு வந்த போது ஏற்கனவே காவல் உதவி ஆய்வாளர் பத்தாயிரம் லஞ்சம் வாங்கி இருந்த நிலையில் இன்று மீண்டும் காவல் உதவி ஆய்வாளர் சுப்பரமணி ஐந்தாயிரம் பணம் பெற்றுக்கொண்டு தனது பாக்கெட்டில் வைக்கும் வீடியோ சமூக வலைதளங்கள் வேகமாக பரவி வருகிறது. மேலும் காவல் நிலையத்திலேயே சிசிடிவி காட்சிகள் இருக்கும் போது அதற்கு டிமிக்கி கொடுக்கும் வகையில் காவல் உதவி ஆய்வாளர் தைரியமாக லஞ்ச பணத்தை பெரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Related Link ஊராட்சி செயலாளர் 2-வது முறையாக பணியிட மாற்றம்