திருச்சி கண்டோன்மென்ட் பாலியல் தடுப்பு பிரிவு காவல் நிலையத்தில் பணிபுரிந்த உதவி ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என 7 பேரை கூண்டோடு ஆயுதப்படைக்கு மாற்றி, மாநகர காவல் ஆணையர் காமினி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீசார், 3 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.அப்போது புரோக்கர்கள் பயன்படுத்திய டைரி போலீசாரிடம் சிக்கியதில், போலீசார் சிலருக்கு மாதா மாதம் மாமுல் கொடுத்ததாக எழுதி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.இது தொடர்பாகவே கண்டோன்மென்ட் பாலியல் தடுப்பு பிரிவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் கீதா உள்ளிட்ட 7 பேர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.