வேலூர் மாவட்டத்தில் 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற உதவி பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர். குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி உதவி பொறியாளராக பணியாற்றி வரும் நிர்மல் குமார், லிங்கேஸ்வரன் என்ற தனியார் ஒப்பந்த மேலாளரிடம் சாலை பணிகளுக்கான காசோலையை வழங்க 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.