சீர்காழி அருகே அரசு மருத்துவமனையின் மருத்துவ உதவியாளரை ஒருவர் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் வீரமணி என்பவர் மருத்துவ உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் விபத்து ஒன்றில் காயமடைந்த கர்ப்பிணி மற்றும் அவரது கணவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர் இல்லாததால் வீரமணி முதலுதவி சிகிச்சை செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கர்ப்பிணியின் உறவினர் ஒருவர் வீரமணியை தாக்கினார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.