சென்னை போரூர் அருகே பாணிபூரி வாங்கி சாப்பிட்டு கொண்டிருந்த பெண்ணை தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதனந்தபுரத்தில் செயல்பட்டு வந்த பாணிபூரி கடையில் பெண் ஒருவர் பாணிபூரி வாங்கி அருகில் உள்ள வீடு முன் அமர்ந்து சாப்பிட்ட நிலையில், வீட்டின் உரிமையாளர் அவரை கட்டையால் தாக்கியதால் படுகாயம் அடைந்தார்.