வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் கிரிக்கெட் ஜாம்பவான்கள் ஆலன் பார்டர் மற்றும் வீரேந்திர சேவாக் சாதனைகளை ரவிச்சந்திரன் அஸ்வின் சமன் செய்துள்ளார். சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலில் 2 சதங்களுடன் அஸ்வின் 3ம் இடத்தில் உள்ளார்.