தஞ்சை பெரிய கோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவின் 7 ஆம் நாள் நிகழ்ச்சியில், மகா வாராஹி அம்மன் நவதானிய அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இக்கோவிலில் தனி சன்னிதியில் வீற்றிருக்கும் மகா வாராஹி அம்மனுக்கு 23-ஆம் ஆண்டு ஆஷாட நவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் விதவிதமான அலங்காரத்தில் வாராஹி அம்மன் எழுந்தருள, 7-ஆம் நாள் விழாவில், அம்மனுக்கு நவதானிய அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதணை காண்பிக்கப்பட்டது.