திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு நெய் காணிக்கை செலுத்தும் கவுண்டரை கோவில் வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் திறந்து வைத்தார். திருக்கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் நிலையில் 10 நாட்கள் திருவிழா நடைபெறும், விழாவின் முக்கிய நிகழ்வான அருணாச்சலேஸ்வரர் மலை உச்சியில் மகா தீபம் டிசம்பர் 13-ம் தேதி மாலை 6 மணிக்கு ஏற்றப்படுகிறது.