சென்னை ஐஐடி சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், சிறந்த முன்னணி நடிகருக்கான விருது அருண் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழ் திரைப்படத்துறையில் சிறந்த படைப்புகளை கவுரவிக்கும் வகையில், சென்னை ஐஐடி Techofes 2025 மெட்ராஸ் வளாகத்தில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நடிகர் அருண் விஜய்க்கு, 'வணங்கான்' திரைப்படத்திற்காக சிறந்த முன்னணி நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.