அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து நடிகர் அருண் விஜய், தேனியில் உள்ள திரையரங்கில் கண்டு ரசித்தார். இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அருண் விஜய் படப்பிடிப்புக்கு இடையே விடாமுயற்சி திரைப்படத்தை கண்டு ரசித்ததோடு, ரசிகர்களை பார்த்து கையசைத்து உற்சாகப்படுத்திவிட்டு சென்றார்.