கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் அருகே உள்ள பூனையம்பேட்டை முனியப்பன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. கோயில் பூசாரி பீமன் தலைமையில், ஸ்ரீ முனியப்பன் கோயிலின் மீது புனித நீர் தெளித்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, பூசாரி பீமன், அரிவாள் மீது ஏறி நின்று சாமி வந்து ஆடியபடியே பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினார். பின்னர் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.