நவராத்திரி திருவிழாவின் 9-ஆம் நாளான செவ்வாய்கிழமை அன்று, தஞ்சை பெருவுடையார் கோவிலில் அருள்பாலிக்கும் பெரியநாயகி அம்மன், மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். நவராத்திரியை ஒட்டி, நந்தி மண்டபத்தில் நடைபெற்ற பரதநாட்டிய கலை நிகழ்ச்சியை பக்தர்கள் கண்டு ரசித்தனர்.