நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவுக்கான புனிதநீர், யானை மேல் வைத்து மேளதாளம் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.முத்துமாரியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வரும் 15ஆம் தேதி நடைபெறுகிறது.இதற்காக 9 புண்ணிய நதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட புனிதநீர், நாகை நீலாயதாட்சி அம்மன் கோவிலில் இருந்து யானை மீது வைத்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.மேளதாளம், டிரம்ஸ் வாத்தியங்கள் முழங்க, கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், கும்மியாட்டம் என களை கட்டிய ஊர்வலத்தில், பெண்கள் மஞ்சள் ஆடை அணிந்து முளைப்பாரி மற்றும் பால்குடம் சுமந்து வந்தனர்.