அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கிராமத்தில் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு மாலை அணிந்த பக்தர்கள், பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தினர். மாரியம்மன் கோவிலில் இருந்து முக்கிய வீதி வழியாக ஊர்வலம் சென்ற பக்தர்கள் கருப்புசாமி, மாரியம்மன் என பல்வேறு தெய்வங்களின் வேடமணிந்து பக்தி பரவசத்துடன் ஓம்சக்தி, பராசக்தி என முழக்கமிட்டு சென்றனர். அதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.