தஞ்சை அருகே காசவளநாடு கோவிலூரில் உள்ள ஜெம்புகேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற ஆயிரத்து 8 திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். 18 கிராமங்களை கொண்ட காசவளநாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த சிவாலயத்தில், ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, கோவில் வளாகத்தில் ஆயிரத்து 8 திருவிளக்கு பூஜை நடைபெற்றது