ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு, கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. கடந்த டிசம்பர் 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆருத்ரா உற்சவத்தின் 9ஆம் நாளில் நடந்த தேரோட்டத்தில் மூலவர் நடராஜமூர்த்தி சிவகாமசுந்தரி அம்பாளுடனும், விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரர் தனித்தனி தேர்களிலும் எழுந்தருளி வீதி உலா வந்தனர். சிலம்பாட்டம், கோலாட்டம், கடவுளர் வேடம் அணிந்தவர்களின் நடனம் உள்ளிட்டவற்றுடன் நடைபெற்ற தேரோட்டத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனர்.