தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே சிவகாமி அம்பாள் சமேத பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வரர் கோயிலில் ஆரூத்ரா தரிசன திருவிழாவை முன்னிட்டு ஆயிரத்து 8 சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அலங்கரித்து வைக்கப்பட்ட ஆயிரத்து எட்டு 8 சங்குகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்த பின்னர் நடராஜ பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.