கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறாமல் விடுப்பட்டவர்களிடம் இருந்து விரைவில் விண்ணப்பம் பெற முகாம் நடத்தப்படும் என வருவாய் துறை அமைச்சர் கே.கே. எஸ்.எஸ். ஆர். ராமசந்திரன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறாமல் விடுப்பட்டவர்களிடமிருந்து விரைவில் விண்ணப்பம் பெறப்பட்டு, அதனை பரிசீலித்து தகுதி உள்ளவர்களுக்கு 1000 ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.