கோவையில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைப்பதற்கான ஆயத்தப்பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.நடப்பு நிதியாண்டின் நிதிநிலை அறிக்கையில், கோவையில் கலைஞர் பெயரில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.தமிழக அரசின் பொதுப்பணித்துறை மூலம் கட்டப்படவிருக்கும் கலைஞர் நூலகம், 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.இந்த நிலையில், அதன் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளியை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.