சென்னை தரமணியில் டைடல் பார்க் அருகில் உள்ள தமிழரசு அரசு இதழ் அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு தோரண வாயிலை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர், தமிழரசு இதழில் வெளியான செய்திகள், கட்டுரைகளை பார்வையிட்ட அவர், வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள கலைஞரின் மார்பளவு சிலையை திறந்து வைத்து, அருகில் வைக்கப்பட்டிருந்த கலைஞரின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.