சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கலையரங்கத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 4 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ஆயிரம் இருக்கைகளுடன் கலைஞர் கலையரங்கம் கட்டப்பட்டது. இதனை திறந்து வைத்த பின் பேசிய அவர், இந்தி திணிப்பு கல்விக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் தேசிய கல்விக்கொள்கை, கல்வி நிதியை தராமல் இருப்பது போன்ற பல தொந்தரவு சூழ்ச்சிகளை மத்திய அரசு கொடுப்பதாகவும், இதனை மாணவர்கள் புரிந்து கொண்டால் எதிரியை வெல்லலாம் எனவும் கூறினார்.