தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி, அலப்பறையில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். தென்காசியை சேர்ந்த கிருஷ்ணன் என்ற இளைஞர் சுய விளம்பரத்திற்காக, நண்பர்களுடன் சேர்ந்து மேளதாளம் முழங்க, ஆளுயர மாலை அணிந்து கொண்டு பேருந்து நிலையம் முன்பு கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தென்காசி காவல் ஆய்வாளர் ராபர்ட் ஜெயின் தலைமையிலான போலீசார், பேருந்து நிலையம் முன்பு அனுமதியின்றி கேக் வெட்டியதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகவும் கூறி கிருஷ்ணனை கைது செய்தனர்.