கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே, கேரளாவை சேர்ந்த கஞ்சா வியாபாரியை கைது செய்த போலீசார், அவனிடமிருந்து 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். நத்தம் கிராமத்தை சேர்ந்த ஆனந்தராஜ் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், கேரளாவை சேர்ந்த பிரேமை போலீசார் கைது செய்தனர்.